நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்; சாத்தனுார் மகா சாத்தையனார் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு முடிவடைந்ததை தொடர்ந்து வருடாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் மூலவருக்கு ஊற்றப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
நடைபெற்ற தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.