UPDATED : மே 29, 2026 05:50 PM
ADDED : மே 29, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பட்டணம்காத்தான் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள வினை தீர்க்கும் வேலவர் கோயிலில் வருடாபிஷேகம் விழா நடந்தது.
காலை 10:00 மணிக்கு யாகசாலையில் பூஜை செய்த புனித கும்ப கலசநீர் மூலவர் வள்ளி, தெய்வானை, வினைதீர்க்கும் வேலவர், வெங்கடாஜலபதி பெருமாளுக்கு அபிஷேகம் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
