ADDED : செப் 11, 2026 04:32 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலச்செங்குடி பத்ரகாளியம்மன், கருப்பண சுவாமி கோயில் வருடாபிஷேக விழா நடந்தது.
முன்னதாக மூலவர்களுக்கு 18 வகையான அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் அம்மன் துதி பாடல்கள் பாடி பிரார்த்தனை செய்தனர். பின்னர் நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை குலதெய்வ வழிபாட்டு நிர்வாகிகள் செய்திருந்தனர்.
