ADDED : செப் 16, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே இளமனுார் குருநாதர் கோயில், தர்ம முனீஸ்வர் வருடாபிஷேக விழா நடைபெற்றது.
முன்னதாக தர்ம முனீஸ்வரருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் குலதெய்வ குடிமக்கள் செய்திருந்தனர்.
