/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விநாயகர் கோயிலில் வருடாபிேஷக விழா
/
விநாயகர் கோயிலில் வருடாபிேஷக விழா
ADDED : ஜன 20, 2024 04:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் அமைந்துள்ள மங்கள விநாயகர் கோயிலில் எட்டாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், ம்ருதியுஞ்ச ஹோமம் நடந்தது. தொடர்ந்து மஞ்சள், திரவியப்பொடி, பால், தயிர், விபூதி என 16 வகை அபிஷேகம் செய்து மங்கள விநாயகருக்கு ராஜ அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஓம் சக்தி நகர், வசந்த நகர். பாரதி நகர், காட்டூரணி, வைகை நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.