ADDED : பிப் 08, 2025 04:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி மூலவருக்கு பாலபிஷேகம் நடந்தது.
பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஜன.,4ல் துவங்கியது. நேற்று முன்தினம் காலை பால் அபிஷேகம் நடந்தது. நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து யாகசாலை பிரவேசம் நடந்தது.
முதல் கால யாக பூஜைகள் துவங்கிய நிலையில் ஜன., 10 காலை 6ம் கால யாக பூஜை, பூர்ணாகுதி நடக்க உள்ளது. காலை 9:10 மணிக்கு மேல் மூலஸ்தான விமானம், ராஜகோபுரம் கும்பாபிஷேகமும், மூலவர், பரிவார தேவதைகளுக்கு மகா அபிஷேகம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள், ஆயிர வைசிய சபையினர் செய்துள்ளனர்.