/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போகலுார் யூனியன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை; ரூ.2.56 லட்சம் சிக்கியது

ADDED : ஏப் 30, 2025 07:12 AM

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே போகலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.2.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பரமக்குடி அருகே போகலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று மாலை ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட போது மூன்று மணி நேரத்துக்கும் மேல் கதவை பூட்டி வைத்து விசாரித்தனர். அப்போது கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 56 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. அதனடிப்படையில் போகலுார் வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசிடம் 59, விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் லஞ்சம் பெற்றதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை டி.எஸ்.பி., தலைமையில் போலீசார் விசாரிக்கின்றனர்.