/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 20, 2025 10:57 PM
பெரியபட்டினம்: -முத்துப்பேட்டை கவுசானல் கலை அறிவியல் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம், மனித செஞ்சுருள் சங்கம் சார்பில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் சூசைநாதன் தலைமை வகித்தார்.
திருப்புல்லாணி எஸ்.ஐ., சிவசாமி முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ்., அலுவலர் திருமணி பொற்செல்வி வரவேற்றார். போதை பொருட்கள் எதிர்ப்பு குறித்த உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
கல்லுாரி செயலர் எட்வர்ட் பிரான்சிஸ், திட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜ், துணை முதல்வர்கள் மகாலட்சுமி, மதன் நாகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மனித செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் பிரசாத் நன்றி கூறினார். கணிதத்துறை மாணவி பர்கத் நசீம் தொகுத்து வழங்கினார்.