/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தை பாலைவனமாக்கும் திட்டங்களை தடுக்க வேண்டும் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு நடவடிக்கை குழு வேண்டுகோள்
/
ராமநாதபுரத்தை பாலைவனமாக்கும் திட்டங்களை தடுக்க வேண்டும் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு நடவடிக்கை குழு வேண்டுகோள்
ராமநாதபுரத்தை பாலைவனமாக்கும் திட்டங்களை தடுக்க வேண்டும் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு நடவடிக்கை குழு வேண்டுகோள்
ராமநாதபுரத்தை பாலைவனமாக்கும் திட்டங்களை தடுக்க வேண்டும் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு நடவடிக்கை குழு வேண்டுகோள்
ADDED : செப் 05, 2025 11:17 PM

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம், நிலக்கரி ஆய்வு கிணறுகள் என்ற பெயரில் ராட்சத இயந்திரங்கள் எங்கு வந்தாலும் விவ சாயிகள், இளைஞர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு நடவடிக்கை குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் திட்ட அமைச்சர் அனுமதி ரத்து செய்வதாக அறிவித்த நிலையில் தொடர்ந்து நடப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க 1403 சதுர கி.மீ., பரப்பளவில் 20 இடங்களில் கிணறுகள் தோண்ட மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது. இது நிலம், நீர், காற்றை நஞ்சாக்கி விவசாயத்தையும், கடல் வளத்தையும் பாதிக்கும்.
தொடர்ந்து திட்டத்தை கைவிட வலியுறுத்தி காவிரி, வைகை, குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் மீன வர்கள், சமூக ஆர்வலர்கள் போராடி வருகிறோம் என ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு நட வடிக்கை குழு ஒருங்கிணைப் பாளர் மலைச்சாமி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
மாநில சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ராமநாத புரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்ட அனுமதியை ரத்து செய்வதாக ஆக.,24ல் அறிவித்தார். ஆனால் தேவிபட்டனம், மாதவனுார் கண்மாய் அருகில் ராட்சத இயந்திரங்களை வைத்து ஓ.என்.ஜி.சி., ஆய்வுக் கிணறுகள் தோண்டும் பணி நடந்தது.
செப்.,1, 2ம் தேதிகளில் அப்பகுதி மக்களை திரட்டி இயந்திரங்களை அப்புறப்படுத்தினோம். ஆனால் வேறு சில இடங்களில் பணிகள் நடக்கிறது. 1994ம் ஆண்டு முதன் முதலில் பெருங்குளம் கிராமத்தில் கிணறு தோண்ட ஆரம்பித்து மாவட்டம் முழுவதும் 86 ஆழ்துளை கிணறு களை ஓ.என்.ஜி.சி., தோண்டியது. தற்போது 36 கிணறுகள் ஹைட்ரோ கார்பன் எடுக்க தயாராக இருக்கிறது. அதில் தற்போது 20 கிணறுகளுக்கு ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது.
இது தவிர பெட்ரோல் கிணறுகள் தோண்டு வதற்கு பெட்ரோல் எக்ஸ்ப்ளோரின் லைசென்ஸ் கேட்டு மாநில தொழில் துறையில் ஓ.என்.ஜி.சி., விண்ணப்பித்துள்ளது. தற்போது நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி ஆய்வு கிணறுகள் என்ற பெயரில் இயந்திரங்களை வைத்து தோண்டுகிறார்கள். 10 அல்லது 20 ஆண்டுகள் கழித்து இது பேராபத்தாக மாறும்.
ஹைட்ரோ கார்பன் 6000 அடி முதல் 10 ஆயிரம் அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுப்பதாகும். நிலக்கரிகள் பல்லாயிரம் ஏக்கரில் திறந்த வெளி சுரங்கம் தோண்டி எடுப்பதாகும். இவ்வாறு ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை வளங்களை கொள்ளை அடிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் துடிக்கின்றன. அதற்கு அரசு நிர்வாகம் துணை போகிறது.
இதனை தடுக்க வேண்டியது நம் கடமை. ஆகவே ராமநாதபுரம் மாவட்டத்தை பாதுகாக்க, வேளாண் மண்டலமாக அறிவித்திட வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறோம். எனவே மாவட்ட முழுவதும் உள்ள விவசாயிகள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்பினர் எங்கு கனரக இயந்திரங்கள் வந்தாலும் அப்பகுதியில் மக்களை திரட்டி அற வழியில் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.