/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவினர் வாகன சோதனை
/
போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவினர் வாகன சோதனை
போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவினர் வாகன சோதனை
போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவினர் வாகன சோதனை
ADDED : நவ 11, 2024 04:03 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் வாகனங்களில் சோதனை நடத்தினர்.
ஆந்திரா மாநிலத்தில்இருந்து அதிகளவில் கஞ்சா ராமநாதபுரம் மாவட்டம் கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்டு வருகிறது.
இதனை தடுக்கும் விதமாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு ஏ.டி.ஜி.பி., அமல்ராஜ் உத்தரவில் வாகனங்களை போலீசார் சோதனை செய்தனர். இன்ஸ்பெக்டர் கண்ணன், போலீசார் கவிதா, சரண்யா ஆகியோர் ஆர்.எஸ்.மடை சோதனை சாவடி, பட்டணம் காத்தான் சோதனை சாவடி பகுதியிலும் வாகனங்களை சோதனையிட்டனர்.
இதில் ராமநாதபுரம் நகர் போலீசாரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து வாகன சோதனைகள் நடத்தப்பட்டு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.