/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துாரில் ஆப்பநாடு மறவர் சங்கம் ஆர்ப்பாட்டம்: போலீசுடன் தள்ளுமுள்ளு போக்குவரத்து பாதிப்பு

ADDED : டிச 28, 2024 01:26 AM

முதுகுளத்துார்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரில் ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்து அவதுாறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கைது செய்ய முயன்ற போது ஆர்ப்பாட்டக்காரர்கள், போலீசாரிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
திருநெல்வேலியில் டிச., 1 ல் மள்ளர் மீட்பு களம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பசும்பொன் முத்துராமலிங்கதேவர் குறித்து உண்மைக்கு புறம்பான தவறான அவதுாறு கருத்துக்களை பேசிய நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மறவர் சங்க தலைவர் ராம்குமார் தலைமை வகித்தார்.
துாத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5000க்கு மேற்பட்டோர் முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் இருந்து காந்தி சிலை, தேரிருவேலி ரோடு வழியாக தேவர் சிலை வரை ஊர்வலமாக செல்ல முயன்றனர்.
அப்போது போலீசார் தடுத்ததால் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின் ஊர்வலமாக முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்ட் தேவர் சிலை முன் சென்று ரோட்டில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதி கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வெளியூர் பயணிகள் அவதிக்குள்ளாயினர். எஸ்.பி., சந்தீஷ் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சங்க தலைவர் ராம்குமார் உட்பட 164 பேர் கைது செய்யப்பட்டனர்.