ADDED : ஆக 30, 2025 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்,:ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிகளில் 2025--26 கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் மாணவர்களிடம் அதற்கான படிவங்களை வழங்கி பூர்த்தி செய்து தலைமையாசிரியர் சார்பில் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இப்பணியை காலம் தாழ்த்தாமல் அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் செயல்படுத்த வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

