/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம்-காசி பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம்
/
ராமேஸ்வரம்-காசி பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : நவ 03, 2024 03:12 AM
ராமநாதபுரம்,:தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு ஆன்மிக பயணம் செல்ல 420 பேர் அழைத்து செல்லப்பட உள்ளதால் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஹிந்து சமய அறநிலையத்துறையில் உள்ள 20 மண்டலங்களில் இருந்து ஒரு மண்டலத்திற்கு 21 பேர் வீதம் 420 பேர் ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு அரசு சார்பில் இலவசமாக ஆன்மிக பயணம் அழைத்து செல்லப்படவுள்ளனர்.
இதற்கான விண்ணப்பங்களை அவரவர் வசிப்பிடங்களில் உள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
ஹிந்து சமய அறநிலையத்துறையின் www.hrce.tn.gov.in இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு டிச.16க்குள் அனுப்ப வேண்டும்.
மண்டல இணை ஆணையர்கள் பரிந்துரைக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்மிக பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள்.-----