ADDED : அக் 31, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா நடந்தது. லயன்ஸ் சங்க தலைவர் இளங்குமரன் தலைமை வகித்தார். பள்ளி சேர்மன் சவுந்தர நாகேஸ்வரன், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் ஆடிட்டர் தினகரன், சங்க செயலாளர் சுப்பையா முன்னிலை வகித்தனர். முதல்வர் ஷோபனா தேவி வரவேற்றார்.
நல்லாசிரியர் விருது பெற்ற அலெக்ஸ், லட்சுமணன் உள்ளிட்டோருக்கு பரிசளிக்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்ற பட்டிமன்றம் நடந்தது. சங்க பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார்