ADDED : டிச 30, 2025 05:21 AM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: -: கரூரில் மாநில அளவிலான பாக்சிங் போட்டி நடந்தது. இதில், சீனியர்,சப் ஜூனியர், ஜூனியர் ஆகிய பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடந்தது.
முதுகுளத்துார் டைகர் பாக்சிங் இன்ஸ்டிடியூட் சார்பில் 10 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், சிவாபாரதி, சுப்ராஜா, நிதில்லா தங்க பதக்கம், ஆப்ரின் பாத்திமா வெள்ளி பதக்கம், லத்திகா கரன் வெண்கல பதக்கம் பெற்றனர். சாதித்த மாணவர்களை இன்ஸ்டிடியூட் உரிமையாளர் பாஸ்கரன், பெற்றோர் பாராட்டினர்.
