/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மதுரை நான்குவழிச் சாலையில் காய்ந்து வரும் அரளிச் செடிகள்; தடுமாறும் வாகன ஓட்டிகள்

ADDED : ஆக 02, 2025 11:19 PM

பரமக்குடி : பரமக்குடியில் இருந்து மதுரை செல்லும் நான்கு வழிச்சாலையின் நடுவில் அரளிச்செடிகள் காய்ந்து வருகின்றன. இதனால் எதிரே வரும் வாகனங்களின் விளக்கு வெளிச்சம் கண்களை கூசுவதால் விபத்து அபாயம் உள்ளது.
பொதுவாக நான்கு வழிச்சாலையின் நடுவில் செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்படுவது வழக்கம்.
இதன்படி பசுமையான சூழலை உருவாக்கும் நோக்கிலும், எதிர் எதிரில் வாகனங்களின் முகப்பு விளக்குகள் கண்களை கூசாமல் இருக்கவும் இது பயன்படுகிறது.
இந்நிலையில் அரளிச்செடிகள் அதிகளவு சென்டர் மீடியனில் வளர்க்கப்படுவது உண்டு.
தொடர்ந்து மதுரை, பரமக்குடி நான்கு வழிச்சாலையின் இடையில் ஆங்காங்கே செடிகள் பராமரிப்பின்றி காய்ந்துள்ளது.
இதனால் முகப்பு விளக்குகள் டிரைவர்களுக்கு கண்களில் கூச்சத்தை ஏற்படுத்துவதால் விபத்து அபாயம் உள்ளது. மேலும் அரளிச் செடிக்கு அதிகளவு பராமரிப்பு தேவையில்லை என்றாலும், அவ்வப்போது தண்ணீர் ஊற்றுவது அவசியமாகிறது.
ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதால் ஏராளமான வாகனங்கள் வருகின்றன.
ஆகவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் செடிகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தினர்.