/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அம்பு எய்யும் நிகழ்ச்சி
/
மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அம்பு எய்யும் நிகழ்ச்சி
மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அம்பு எய்யும் நிகழ்ச்சி
மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அம்பு எய்யும் நிகழ்ச்சி
ADDED : அக் 14, 2024 08:09 AM

ரெகுநாதபுரம், : விஜயதசமி பெருவிழா நிறைவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு வல்லபை ஐயப்பன் கோயிலில் அம்பு எய்யும் நிகழ்ச்சி நடந்தது.
மூலவர் வல்லபை மஞ்ச மாதாவிற்கு தொடர்ந்து பத்து தினங்களும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகளும் ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு கொலு மண்டபத்தில் அருள்பாலித்தார். நேற்று விஜயதசமி நிறைவை முன்னிட்டு வல்லபை ஐயப்பன் கோயில் முன்புறம் உள்ள திடலில் தலைமை குருசாமி மோகன் முன்னிலையில் அம்பு எய்யும் நிகழ்ச்சி நடந்தது.
எய்யப்பட்ட அம்பை பிடிப்பதற்காக ஏராளமானோர் போட்டி போட்டு எடுத்தனர்.
உற்ஸவர் வல்லபை மஞ்சமாதாவிற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.