/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதா 'நம்ம சாலை' செயலியில் பதிவேற்றுங்கள்
/
சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதா 'நம்ம சாலை' செயலியில் பதிவேற்றுங்கள்
சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதா 'நம்ம சாலை' செயலியில் பதிவேற்றுங்கள்
சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதா 'நம்ம சாலை' செயலியில் பதிவேற்றுங்கள்
ADDED : பிப் 24, 2024 05:50 AM
திருவாடானை, : சாலைகளில் குண்டும், குழியுமாக இருந்தால் நெடுஞ்சாலைத்துறை அறிமுகப்படுத்தியுள்ள 'நம்ம சாலை' திட்டத்தை பயன்படுத்தலாம் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
சாலைகளில் இருக்கும் பிரச்னைகள் குறித்து மக்கள் நேரடியாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் நம்ம சாலை செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நம்ம சாலை ஆப் மூலம் சாலைகளில் பள்ளம், குழிகள், சேதங்களோ அல்லது இதர இடர்பாடுகளோ இருந்தால் மக்கள் அதனை படம் பிடித்து பதிவேற்றலாம்.
திருவாடானை நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கூறியதாவது:
நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் பள்ளம் மற்றும் மோசமான நிலையில் பராமரிப்பு இருந்தால் பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு வசதியாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் 'நம்ம சாலை' என்ற பெயரில் அலைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இதை அலைபேசியில் பதிவிறக்கம் செய்து அதில் சாலையின் நிலை குறித்த புகைப்படம், அந்த இடத்தில் இருக்கும் கட்டடங்கள், சாலை சந்திப்பு உள்ளிட்ட அடையாளங்களை பதிவேற்ற வேண்டும். அலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும்.
பதிவேற்றம் செய்த 24 மணி நேரத்திற்குள் சாலையில் சீரமைப்பு பணி மேற்கொள்ளபடும். தேசிய நெடுஞ்சாலை மற்றும் யூனியன் சாலைகளை தவிர்த்து பொதுமக்கள் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றனர்.