/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் சுற்றித் திரிவது காட்டுப்பன்றியா வளர்ப்பு பன்றிகளா: டி.என்.ஏ., பரிசோதனை வனத்துறை நடவடிக்கை
/
ராமநாதபுரத்தில் சுற்றித் திரிவது காட்டுப்பன்றியா வளர்ப்பு பன்றிகளா: டி.என்.ஏ., பரிசோதனை வனத்துறை நடவடிக்கை
ராமநாதபுரத்தில் சுற்றித் திரிவது காட்டுப்பன்றியா வளர்ப்பு பன்றிகளா: டி.என்.ஏ., பரிசோதனை வனத்துறை நடவடிக்கை
ராமநாதபுரத்தில் சுற்றித் திரிவது காட்டுப்பன்றியா வளர்ப்பு பன்றிகளா: டி.என்.ஏ., பரிசோதனை வனத்துறை நடவடிக்கை
ADDED : செப் 09, 2025 10:54 PM
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளால் அதிக விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.இங்கு திரிவது காட்டுபன்றிகளா அல்லது வளர்ப்பு பன்றிகளா என்பதை கண்டறிய வனத்துறையினர் பன்றியின் எச்சங்கள்,ரத்த மாதிரிகளை சேகரித்து டி.என்.ஏ., பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
பரமக்குடி, கமுதி, முதுகுளத்துார் தாலுகாக்களில் காட்டுப்பன்றிகள், மான்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக காட்டுப்பன்றிகள் பயிர்களை அழிப்பதுடன், விளை நிலங்களுக்குச் செல்லும் விவசாயிகளை தாக்கி காயப்படுத்துகின்றன.
விவசாயிகள் ஒலிபெருக்கி போன்ற புதிய முறைகளைப் பயன்படுத்தி பன்றிகளிடமிருந்து தங்கள் பயிர்களைக் பாதுகாக்க முயற்சி செய்கின்றனர். 75 ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலங்களில் நெல், பருத்தி, எள், சோளம், பயறு வைகைகள் மற்றும் 40 ஆயிரம் ஏக்கரில் கடலை சாகுபடி பாதிக்கப்படுகிறது.
காட்டுப்பன்றிகளை சுட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் சுற்றித் திரியும் பன்றிகள் உண்மையில் காட்டுபன்றி வகையை சேர்ந்தவையா அல்லது வளர்ப்பு பன்றிகளா என்பவதை கண்டறிய மாவட்ட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
டி.என்.ஏ., பரிசோதனை ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ேஹமலதா கூறுகையில், காட்டுபன்றிகள், மான்களால் பயிர் சேதத்தை கணக்கிட்டு உரிய இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. சிவகங்கையில் நடத்திய ஆய்வில் பல இடங்களில் வளர்ப்பு பன்றிகள் சுற்றித் திரிவது கண்டறியப் பட்டுள்ளது.
இதையடுத்து தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளவை காட்டுபன்றிகளா அல்லது வளர்ப்பு பன்றிகளா என்பதை கண்டறிய முதுகுளத்துாார், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் திரியும் பன்றிகளின் ரத்தம், தடங்கள், எச்சம் ஆகிய மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஏ.ஐ.டபுள்யூ.சி., வன உயிரின ஆய்வகத்திற்கு டி.என்.ஏ., பரிசோதனைக்காக அனுப்பியுள்ளோம்.
அதன் முடிவிற்காக காத்திருக்கிறோம். ஒருவேளை வளர்ப்பு பன்றிகள் என தெரிய வந்தால் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்காது என்றார்.