/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரியமானா.. அசுத்த மானா... அலங்கோலமான நிலையில் இன்று அழகிய அரியமான் பீச்
/
அரியமானா.. அசுத்த மானா... அலங்கோலமான நிலையில் இன்று அழகிய அரியமான் பீச்
அரியமானா.. அசுத்த மானா... அலங்கோலமான நிலையில் இன்று அழகிய அரியமான் பீச்
அரியமானா.. அசுத்த மானா... அலங்கோலமான நிலையில் இன்று அழகிய அரியமான் பீச்
ADDED : மே 17, 2024 07:13 AM

சமீபத்தில் கோடை விழா அரியமான் பீச்சில் நடத்த கடற்கரையை பார்வையிட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கண்களில் கூட இது படாதது வேதனையான விஷயம் தான்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் ஒரே கடற்கரை அரியமான் கடற்கரை தான். மாவட்ட மக்கள் மட்டுமின்றி, வெளியூர் சுற்றுலாப்பயணிகளும் இங்கு வந்து செல்கின்றனர். ராமநாதபுரத்தில் இருந்து 26 கி.மீ.,ல் மதுரை--ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சுந்தரமுடையான் பஸ்ஸ்டாப் அருகில் இடதுபுறமாக சென்றால் அரியமான் பீச்சை அடையலாம்.
தேக்கு மரங்கள் அடர்ந்த அழகிய கடற்கரை கண்களுக்கு விருந்தளிக்கிறது. கடற்கரைக்கு வருவதற்கு முன் டூவீலர், கார், வேன், பஸ் போன்ற வாகனங்களுக்கு தற்போது அதிக நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்படி கட்டணம் மட்டும் வசூலிக்கும் நிர்வாகம் கடற்கரையை மட்டு குப்பை மேடாக்கி இருப்பது சுற்றுலாப்பயணிகளை வேதனை அடையச் செய்கிறது.
தெளிந்த நீரோடை போன்ற கடல் நீர் பல மாதங்களில் அலைகளின்றி அமைதியாக காணப்படுகிறது. தற்போது சற்று லேசான அலை அடிக்கிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இங்கு ஆனந்தமாக நீராடி மகிழ்கின்றனர்.
இது தவிர பயணிகளை பாதுகாப்பு கவசங்களுடன் படகு சவாரி அழைத்துச்செல்கின்றனர். இதற்காக நபர் ஒருவருக்கு ரூ.150 வசூலிக்கின்றனர். கடல் அழகை படகில் சென்றும் ரசிக்க சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மகா அசுத்தம்: மணலும் கருப்பானது
எழில் கொஞ்சும் மாவட்டத்தின் சுற்றுலாப்பகுதியான இந்த ஒரே ஒரு கடற்கரையை கூட சுத்தமாக வைக்க முடியாத மாவட்ட நிர்வாகத்தை மக்கள் குறை கூறுகின்றனர். கடற்கரை முழுவதும் கடல் பகுதி வரை பிளாஸ்டிக் கழிவுகள், கிழிந்த கந்தல் துணிகள், அசுத்தமான பொருள்கள் நிரம்பி கிடக்கின்றன.கடற்கரையில் கால் வைக்கவே அசுத்தமாக உள்ளது. மேலும் கடற்கரையில் முன்பு வெண்பட்டு மணல் இருந்தது தற்போது கருப்பாக மாறியதால் அசுத்தமாக மாறியுள்ளது.
எங்கு பார்த்தாலும் உடைந்த மது பாட்டில்கள்
இந்த கடற்கரை மணல் பரப்பில் எங்கு பார்த்தாலும் உடைந்த காலி மது பாட்டில்கள் சிதறிக்கிடக்கின்றன. இரவு நேரங்களில் மது அருந்துவோர் இங்கு வீசியுள்ள பாட்டில்களை சேகரித்தாலே ஒரு டன் சேரும். அந்த அளவிற்கு மது பாட்டில்கள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. பல இடங்களில் உடைத்து வீசப்பட்டிருப்பதால் கடற்கரையில் ஆர்வமாக துள்ளி விளையாடும் சிறுவர்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது. அவர்கள் கடற்கரை மணல் தானே என்று வெறுங்காலில் சென்றால் உடைந்த மது பாட்டில்கள் காலில் குத்தி பெரும் காயத்தை ஏற்படுத்தும்.
எனவே எழில் கொஞ்சும் அரியமான் கடற்கரையின் அழகை சீர்குலைப்போரை தடுக்கவும், தண்டிக்கவும் வேண்டும். பொதுமக்களும் தங்களின் பொறுப்பை உணர்ந்து கடற்கரையில் குப்பையை வீசக்கூடாது. போலீசாரை நியமித்து கண்காணிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் மாதம் ஒரு முறையாவது கடற்கரையில் துாய்மைப்பணி செய்ய வேண்டும். தன்னார்வலர்களை பயன்படுத்தலாம்.
எனவே அரிமான் கடற்கரை அசுத்தமாகாமல் பாதுகாப்பது அரசு மட்டுமின்றி நம் அனைவரின் கடமையாகும்.

