/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
/
ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
ADDED : டிச 24, 2024 04:25 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த மாயாண்டி என்ற இளைஞரை நீதிமன்ற வாசலில் கும்பல் வெட்டிக்கொலை செய்தனர். இந்த சம்பவத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம் 'பாதுகாப்பு விஷயத்தில் போலீஸ் என்ன செய்கிறது' என கேள்வி எழுப்பினர்.
இதன் எதிரொலியாக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் அனைத்து நீதிமன்றங்களிலும் கைத்துப்பாக்கியுடன் எஸ்.ஐ., தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
*இதேபோல் நேற்று திருவாடானை நீதிமன்றம் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சந்தகேப்படும் படியாக செல்பவர்களை போலீசார் சோதனை செய்தனர்.