/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதிய டிரைவர்களை தேர்வு செய்து பஸ்களை இயக்குவதற்கு ஏற்பாடு
/
புதிய டிரைவர்களை தேர்வு செய்து பஸ்களை இயக்குவதற்கு ஏற்பாடு
புதிய டிரைவர்களை தேர்வு செய்து பஸ்களை இயக்குவதற்கு ஏற்பாடு
புதிய டிரைவர்களை தேர்வு செய்து பஸ்களை இயக்குவதற்கு ஏற்பாடு
ADDED : ஜன 10, 2024 12:15 AM
ராமநாதபுரம் : -போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழகத்தில் பஸ்களை இயக்க புதிய டிரைவர்களை தேர்வு செய்யும் பணி நடந்தது.ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் நகர், புறநகர் கிளைகள், ராமேஸ்வரம், முதுகுளத்துார், கமுதி, பரமக்குடி ஆகிய கிளைகளில் இருந்து 318 பஸ்கள் இயக்கப்படுகின்றன. வேலை நிறுத்தத்தின் முதல் நாளான நேற்று முழுவதும் தொ.மு.ச., தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பஸ்களை இயக்கி வருகின்றனர்.
இதன் காரணமாக 50 சதவீதம் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காக புதிய டிரைவர்கள் தேர்வு செய்து பஸ்களை இயக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். ராமநாதபுரம் அரசு பணிமனையில் புதிய டிரைவர்களுக்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இதில் தேர்வு செய்யப்பட்ட 30க்கும் மேற்பட்டவர்களை ஒவ்வொரு கிளைக்கும் 5 பேர் வீதம் அனுப்பி வருவதாக ராமநாதபும் கோட்ட மேலாளர் பத்மகுமார் தெரிவித்தார்.