/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மானிய உரம் விரைவாக கிடைப்பதற்கு ஏற்பாடு
/
மானிய உரம் விரைவாக கிடைப்பதற்கு ஏற்பாடு
ADDED : ஆக 17, 2025 12:24 AM
ராமநாதபுரம்: விவசாயிகள் மானிய உரங்களை விரைவாக பெறுவதற்கு 287 புதிய பி.ஓ.எஸ்., வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பாஸ்கர மணியன் தெரிவித்து உள்ளார்.
பயிர் சாகுபடிக்கு தேவையான இடு பொருட்களில் உயிர்ம உரங்கள், ரசாயன உரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதனை விவசாயி களுக்கு சரியான விலையில் வழங்கும் பொருட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் சில்லரை உர விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப் படுகிறது. பி.ஓ.எஸ்., கருவி மூலம் மட்டும் மானிய உரங்கள் வழங்கப்படுகிறது.
இதனால் 129 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 158 தனியார் சில்லரை உர விற்பனையாளர்கள் என 287 பேருக்கு புதிய பி.ஓ.எஸ்., கருவி வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பாஸ்கரமணியன் இதனை துவக்கி வைத்தார்.
அவர் கூறியதாவது:
புதிய பி.ஓ.எஸ்., கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் எண்ணை கொண்டு விரைவாக உரம் வழங்க முடியும். உர விற்பனையாளர்கள் விவசாயிகளின் ஆதார் எண் மூலம் கை விரல் ரேகையை பயன் படுத்தி மட்டும் உரம் விற்பனை செய்ய வேண்டும்.
தொடர்ந்து 30 நாட் களுக்கு மேல் பயன் படுத்தாமல் இருந்தால் பி.ஓ.எஸ்., கருவி பழுதாகிவிடும் என்றார். வேளாண்மை துணை இயக்குநர்கள் அமர்லால், ராஜேந்திரன், உதவி இயக்குநர் நாகராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.