/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குடற்புழு நீக்க மாத்திரை வழங்க நாளை ஏற்பாடு
/
குடற்புழு நீக்க மாத்திரை வழங்க நாளை ஏற்பாடு
ADDED : ஆக 10, 2025 02:32 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளில் நாளை (ஆக.11) குடற்புழு நீக்க மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகமாவட்ட சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ரத்த சோகையை தடுக்க தேசிய குடற்புழு நீக்க நாள் ஆண்டு தோறும் பிப்., ஆக., மாதங்களில் கடைபிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு ஆக.,11ல் தேசிய குடற்புழு நீக்க முகாம் நடக்கிறது. இதில் அல்பன்டசோல் மாத்திரை (குடற்புழு நீக்க மாத்திரை) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் குடலில் உள்ள புழுத்தொற்று நீங்குவதுடன் மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்கிறது. ரத்தசோகை குறைபாடு, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, சோர்வு, படிப்பில் ஆர்வமின்மை ஏற்படாமல்தடுக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு வயது முதல் 19 வயதுக்குட்பட்ட 3 லட்சத்து 39 ஆயிரத்து 914 பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அங்கன்வாடி குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுகுட்பட்ட (கர்ப்பமில்லாத, பாலுாட்டும் தாய்மார்கள் தவிர) 69 ஆயிரத்து 152 பெண்களுக்கும் வழங்கப்படும். அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடிகளில் ஆக.,11ல் வழங்கப்படும் குடற்புழு மாத்திரையை பெற்று கொள்ளலாம். விடுபட்டவர்களுக்கு ஆக.,18ல் வழங்கப்படும் என மாவட்ட சுகாதார அலு வலர் தெரிவித்துள்ளார்.