/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மனைவியை அரிவாளால் வெட்டி மகள்களுக்கு சூடு வைத்தவர் கைது
/
மனைவியை அரிவாளால் வெட்டி மகள்களுக்கு சூடு வைத்தவர் கைது
மனைவியை அரிவாளால் வெட்டி மகள்களுக்கு சூடு வைத்தவர் கைது
மனைவியை அரிவாளால் வெட்டி மகள்களுக்கு சூடு வைத்தவர் கைது
ADDED : பிப் 21, 2025 02:42 AM

திருவாடானை:மனைவியை அரிவாளால் வெட்டி இரு மகள்களுக்கு சூடு வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதுக்குடியை சேர்ந்தவர் மீனவர் சமயமுத்து 35. மனைவி ராஜேஸ்வரி 25. இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். நேற்று முன்தினம் கோபமாக தாய் வீட்டிற்கு செல்ல முயன்ற மனைவியை சமயமுத்து தடுத்தார்.
அப்போது இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. மனைவி ராஜேஸ்வரியை சமயமுத்து அரிவாளால் வெட்டினார். காஸ் சிலிண்டர் டியூபை கழற்றி தீயை பற்ற வைத்து மகள்கள் விகாஷனி 5, கவினா 3, இருவரின் காலில் சூடு வைத்ததால் காயமடைந்தனர்.
மூவரும் திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். ராஜேஸ்வரி 25, புகாரில் இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன், எஸ்.ஐ., கோவிந்தன், சமயமுத்துவை கைது செய்தனர்.