நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கலைத் திருவிழா செப்.16ல் துவங்கி இரண்டு கட்டமாக நடந்தது. நேற்று முன்தினம் நிறைவு விழா நடந்தது. முதல்வர் பழனியப்பன் தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை கவுரவ விரிவுரையாளர் சரவணன் வரவேற்றார். ஆங்கிலத்துறை தலைவர் மணிமேகலை அறிக்கை வாசித்தார்.
திருவாடானை நீதிமன்ற நீதிபதி ஆண்டனி ரிஷன் தேவ் பேசினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். மாணவர்கள் இயக்கிய குறும்படம் திரையிடப்பட்டது. வணிகவியல் துறை பேராசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.

