UPDATED : அக் 13, 2026 04:56 AM
ADDED : அக் 12, 2026 07:37 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வேலுமனோகரன் கலை அறிவியல் மகளிர் கல்லுாரி வணிகவியல், கணினிப் பயன்பாட்டியல் துறை சார்பில், “வணிகம், மேலாண்மை மற்றும் நிதித் தொழில் நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மாற்றம்” என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் நடந்தது.
ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி தொழில் நுட்ப அறிவியல் நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் டாக்டர் பிரதாப்சந்திரன், “செயற்கை நுண்ணறிவுக்கு அப்பால் அடுத்த தலைமுறை அறிவார்ந்த டிஜிட்டல் உலகை உருவாக்குதல்” என்ற தலைப்பிலும், சென்னை ஹிந்துஸ்தான் தொழில் நுட்பம், அறிவியல் நிறுவனத்தின் தேர்வுநிலை உதவிப் பேராசிரியர் டாக்டர் ராம்கி, “செயற்கை நுண்ணறிவும் வணிகமும், எதிர்கால அறிவார்ந்த வணிகம், நிதித் தொழில் நுட்பம்” என்ற தலைப்பிலும் விரிவாக பேசினர்.
கல்லுாரித் தலைவர் மனோகரன், துணைத் தலைவர் பார்த்தசாரதி, செயலர் சகுந்தலா, முதல்வர் டாக்டர் ரஜனி ஆகியோர் பங்கேற்றனர். கலந்து கொண்டு சிறந்த ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தவர்களுக்குப் பரிசுகளை வழங்கப்பட்டது. துறைத் தலைவர் டாக்டர் தீபிகா ஒருங்கிணைப்பில், பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்தனர். ----
