/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அமிர்த வித்யாலயாவில் கலைத்திறன் கண்காட்சி
/
அமிர்த வித்யாலயாவில் கலைத்திறன் கண்காட்சி
ADDED : டிச 01, 2024 11:59 PM
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே ஆர்.எஸ்.மடை அமிர்த வித்யாலயம் சி.பி.எஸ்.இ., பள்ளியில் அனைத்து துறை சார்ந்த அமிர்த பிரதர்சனம் என்ற கண்காட்சி நடந்தது.
பள்ளி மேலாளர் பிரம்மச்சாரிணி லட்சுமி தலைமை வகித்தார். முதல்வர் கோகிலா முன்னிலை வகித்தார். துணை முதல்வர் பாலவேல் முருகன் வரவேற்றார். மூத்த அறிவியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் ராஜு சரவணன் பங்கேற்று பேசுகையில், அனைத்து துறை சார்ந்த கண்காட்சியின் மூலம் அரிய பல தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றனர். ஒரு சில துறைகளுக்கு மட்டும் பங்களிப்பை அளிக்காமல் அனைத்து துறைகளுக்கும் ஒத்துழைப்பை நல்க வேண்டும். மாணவர்களின் கலை நயத்துடன் பொருள்பட அமைக்கப்பட்ட கண்காட்சி பாராட்டுக்குரியது என்றார்.
தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, புவியியல் உள்ளிட்ட பாடங்களின் அடிப்படையில் பல்வேறு வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
கண்காட்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.