/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கை கோயிலில் ஜன.13ல் ஆருத்ரா தரிசன விழா
/
உத்தரகோசமங்கை கோயிலில் ஜன.13ல் ஆருத்ரா தரிசன விழா
ADDED : டிச 12, 2024 04:57 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஜன.13ல் ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது.
ஆதி சிவன் கோயில் என்றழைக்கப்படும்உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமிகோயிலில் உள்ள பச்சை மரகத நடராஜர் சிலையில் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டிருக்கும். ஆண்டிற்கு ஒருமுறை மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவில் மட்டும் சந்தனம் களையப்பட்டு சிறப்பு அபிேஷக பூஜைகள் நடத்தப்பட்டு மீண்டும் புதிய சந்தனம் பூசப்படும்.
இந்த நாளில் நடராஜரை தரிசனம் செய்வதற்காக வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் உத்தரகோசமங்கை வருவர்.
இந்த ஆண்டு விழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறியதாவது: விழாவையொட்டி 2025 ஜன.13ல் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதை ஈடுசெய்யும் பொருட்டு ஜன.25ல் வேலை நாளாக இருக்கும் என்றார்.