/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விண்ணேற்பு ஆண்டவர் சர்ச் தேர் ஊர்வலம்
/
விண்ணேற்பு ஆண்டவர் சர்ச் தேர் ஊர்வலம்
ADDED : ஜூன் 02, 2025 10:35 PM

கமுதி: கமுதி அருகே திருச்சிலுவையாபுரம் கிராமத்தில் விண்ணேற்பு ஆண்டவர் சர்ச் தேர் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் சிறப்பு திருப்பலி நடந்தது.
பாதிரியார்கள் அம்புரோஸ் லுாயி, அமலன், மரியதுரை, மான்சிங், சார்லஸ் முன்னிலை வகித்தனர். விண்ணேற்பு ஆண்டவர், அன்னை மரியாள், மிக்கேல் ஆண்டவர், அருளானந்தர் தேர் மின்னொளி அலங்காரத்தில் கிராமத்தின் முக்கிய வீதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
தேர் வந்த போது மாலை, உப்பு, மெழுகுவர்த்தி, நிலங்களில் விளைந்த நெல், மிளகாய், நிலக்கடலை படைத்து பொதுமக்கள் வழிபட்டனர். மெழுகுவர்த்தி ஏந்தி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.