UPDATED : ஆக 21, 2026 07:25 PM
ADDED : ஆக 21, 2026 07:12 PM
தொடர்ந்து ஏற்படும் தும்மலை கட்டுப்படுத்துவது எப்படி.
--எஸ். முருகன், சாயல்குடி.
பொதுவாக தொடர் தும்மலுக்கு காரணம் அடிக்கடி குளிர்பானங்களை குடிப்பதும், ப்ரிட்ஜில் வைக்கப்பட்ட பாட்டில் குடிநீரை குடிப்பதும் இதற்கு வழிவகுக்கும். துாசி உள்ள இடங்களில் இருக்கும் போதும் 'டஸ்ட் அலர்ஜியாக' மாறும். இதனால் கண்களில் நீர் வடிதல் மற்றும் தொடர் தும்மல் உள்ளிட்டப் பாதிப்புகள் ஏற்படும்.
இவற்றை தடுக்க குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். சத்துமிக்க பழங்களை சாப்பிட வேண்டும். துாசி இல்லாத இடங்களில் பணிபுரிவதற்கு ஏற்ப மாஸ்க் அணிய வேண்டும். அதையும் மீறி தொடர் தும்மல் ஏற்பட்டு வந்தால் டாக்டரின் அறிவுரைப்படி மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
-எம்.ராமச்சந்திரன், பொதுநல மருத்துவர், சாயல்குடி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், ராமநாதபுரம் மாவட்டம்.
------------
