/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போலீசுக்கு இலவசமாக உடல் பரிசோதனை பயிற்சி ஏ.எஸ்.பி., அசத்தல்
/
போலீசுக்கு இலவசமாக உடல் பரிசோதனை பயிற்சி ஏ.எஸ்.பி., அசத்தல்
போலீசுக்கு இலவசமாக உடல் பரிசோதனை பயிற்சி ஏ.எஸ்.பி., அசத்தல்
போலீசுக்கு இலவசமாக உடல் பரிசோதனை பயிற்சி ஏ.எஸ்.பி., அசத்தல்
ADDED : ஏப் 11, 2025 04:41 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில்போலீசாருக்கு முழு உடல் பரிசோதனை முகாம் நடத்திய பயிற்சி ஏ.எஸ்.பி., தனுஷ் குமாருக்கு போலீசார் நன்றி தெரிவித்தனர்.
திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் ஏழு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இந்த போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றும் அனைத்து போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதற்கான ஏற்பாட்டை பயிற்சி ஏ.எஸ்.பி., தனுஷ் குமார், ரோட்டரி சங்கத்துடன் இணைந்து மேற்கொண்டார்.
அதன்படி நேற்று இந்த காவல் நிலையங்களில் பணியாற்றும் 150க்கும் மேற்பட்ட போலீசாருக்கு ரத்தம், கண் பரிசோதனை,சர்க்கரை, இ.சி.ஜி., இதயத்தின் அமைப்பு மற்றும் செயல்பாட்டின் நிலை அறியும் எக்கோ டெஸ்ட் (எக்கோ கார்டியோ கிராம்) உள்ளிட்ட முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
போலீசார் அனைவருக்கும் ஒரே நாளில் இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்த பயிற்சி ஏ.எஸ்.பி., தனுஷ்குமாருக்கு போலீசார் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் டி.எஸ்.பி., சீனிவாசன், ரோட்டரி சங்க முன்னாள் கவர்னர் சின்னதுரை அப்துல்லா, துணை கவர்னர் செல்வராஜ், முன்னாள் துணை கவர்னர் ஜெகதீஷ் சந்திர போஸ், ஆர்.எஸ்.மங்கலம் ரோட்டரி சங்கத் தலைவர் ஜார்ஜ், செயலாளர் பைராம்கான், பொருளாளர் பாலமுருகன்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

