தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கடன் தர மறுத்தவரை தாக்கியவர் கைது

கடன் தர மறுத்தவரை தாக்கியவர் கைது

கடன் தர மறுத்தவரை தாக்கியவர் கைது


UPDATED : நவ 28, 2026 12:00 AM

ADDED : நவ 27, 2026 11:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 12:00 AM ADDED : நவ 27, 2026 11:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:

மளிகை கடையில் கடனாக பொருள் தர மறுத்தவரை தாக்கி வாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் அருகே பெருங்குளம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் மனைவி ஈஸ்வரி 35. அப்பகுதியில் மளிகை மற்றும் துணிக்கடை நடத்தி வருகிறார்.

நவ.,24, மாலை 6:00 மணிக்கு பெருங்குளம் முருகராஜ் மகன் முனீஸ்கண்ணன் 27, கடைக்கு வந்து ஜூஸ் கேட்டுள்ளார்.

பின் ஈஸ்வரி பணம் கேட்ட போது கடைக்கு தீ வைத்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

மறுநாள் திரும்பவும் கடைக்கு வந்தவர் கல்லால் ஈஸ்வரியை தாக்கியுள்ளார்.

கையில் வைத்திருந்த வாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதே போல் ஆக.,16ல் பெருங்குளம் ராஜ்குமார் நடத்தி வரும் கடையில் கடனுக்கு பொருள் தர மறுத்த நிலையில் அவரை தாக்கி சிகரெட், சாக்லெட் பாக்கெட், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை மிரட்டி வாங்கி சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இரு வழக்குகளில் முனீஸ்கண்ணனை உச்சிப்புளி போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us