sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சட்டசபை பொதுகணக்கு குழு அதிகாரிகள் ஆய்வு கூட்டம்

/

சட்டசபை பொதுகணக்கு குழு அதிகாரிகள் ஆய்வு கூட்டம்

சட்டசபை பொதுகணக்கு குழு அதிகாரிகள் ஆய்வு கூட்டம்

சட்டசபை பொதுகணக்கு குழு அதிகாரிகள் ஆய்வு கூட்டம்


ADDED : ஜன 25, 2025 07:02 AM

Google News

ADDED : ஜன 25, 2025 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் கூட்ட அரங்கத்தில் தமிழக சட்டசபை பொதுகணக்கு குழு மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது.

குழுவின் தலைவர் செல்வபெருந்தகை தலைமை வகித்தார். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சட்டசபை இணைச்செயலாளர் ரேவதி, எம்.எல்.ஏ.,க்கள் சந்திரன், எழிழரசன், முகமது சானாவாஸ், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.டி.சேகர் பங்கேற்றனர்.

செல்வப்பெருந்தகை கூறுகையில், 8 துறைகளின் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்துள்ளோம். தனுஷ்கோடியில் கழிப்பறை, அலைபேசி டவர் அமைக்கவும், பெரிய சுற்றுலாத்துறையாக மாற்ற பரிந்துரை செய்துள்ளோம். கடல் ஆமை இனப்பெருக்க திட்டம் சிறப்பாக செயல்படுத்துகின்றனர். ராமேஸ்வரத்திற்கு தரிசனம் செய்ய வரும் கழிவுகளை விடுகின்றனர். கடலில் கழிவுநீர் கலக்காத வகையில் திட்டம் கொண்டு வரவும், ராமேஸ்வரத்தில் சாலைவசதி மேம்படுத்தவும் பரிந்துரை செய்துள்ளோம்.

ஆய்வு கூட்டத்தில் பள்ளிக்கல்விதுறை, தொழிலாளர் துறை என சில துறைகளில் குறைகள் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தந்த துறை செயலாளர்களை சென்னைக்கு வரவழைத்து தீர்வு காணப்படும். இலங்கை அகதிகள் வாழும் மண்டபம் பகுதியில் ஆய்வு செய்தோம்.

மருத்துவக்கல்லுாரியில் டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றார். எம்.எல்.ஏ.,க்கள் ராமநாதபுரம் காதர்பாட்ஷா, திருவாடானை கருமாணிக்கம், பரமக்குடி முருகேசன், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us