/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி; மினி ஸ்டேடியம் திட்டம் துவங்க கோரிக்கை

ADDED : ஜன 10, 2024 12:18 AM

தொண்டி : தொண்டி பேரூராட்சி சார்பில் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
தொண்டி பேரூராட்சி சார்பில் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு உதவும் வகையில் தொண்டி பேரூராட்சி சார்பில் தலைவர் ஷாஜகான்பானு, துணைத் தலைவர் அழகுராணி மற்றும் கவுன்சிலர்களின் ஒரு மாதம் மதிப்பூதியம் ரூ.45,500 முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் வழங்கப்பட்டது.
பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு கூறியதாவது: தமிழக வீரர்கள் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவும், வெற்றி பெறவும் தேவையான வசதிகளும், பயிற்சியும் அளிக்கவும் விளையாட்டு வீரர்களின் கனவை நனவாக்கவும் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் தாலுகா தலைமையிடங்களில் மினிஸ்டேடியம் அமைக்கபடும் என்ற அறிவிப்பு வெளியானது.
தொண்டியில் அதற்கான இடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே 5 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மினிஸ்டேடியம் அமையும் பட்சத்தில் பள்ளி மாணவர்களும், உள்ளூர் இளைஞர்களும் உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.
ஆகவே விரைவில் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது.