/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயிர் இன்சூரன்ஸ் காலக்கெடு நீட்டிக்க சங்கங்கள் வலியுறுத்தல்
/
பயிர் இன்சூரன்ஸ் காலக்கெடு நீட்டிக்க சங்கங்கள் வலியுறுத்தல்
பயிர் இன்சூரன்ஸ் காலக்கெடு நீட்டிக்க சங்கங்கள் வலியுறுத்தல்
பயிர் இன்சூரன்ஸ் காலக்கெடு நீட்டிக்க சங்கங்கள் வலியுறுத்தல்
ADDED : நவ 12, 2025 09:55 PM
ஆர்.எஸ்.மங்கலம்: நவ.13--: பயிர் இன்சூரன்ஸ் காலக்கெடுவை நீட்டிக்க விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலெக்டரிடம் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களுக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயிர் இன்சூரன்ஸ் பதிவு செய்வதற்கு நவ.,15 கடைசி நாள். இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன. ஆனால் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடிக்கான அடங்கல் சான்று வழங்கும் வி.ஏ.ஓ.,க்கள் வாக்காளர் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் பெரும்பாலான கிராம பகுதிகளில் விவசாயிகளுக்கு அடங்கல் சான்று வழங்கவில்லை.
இதனால், தினமும் வி.ஏ.ஓ.,க்களை தேடி விவசாயிகள் அலைந்து வரும் நிலை உள்ளது. பயிர் காப்பீடு பதிவு செய்யும் சர்வரில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாகவும் விவசாயிகள் பதிவு மேற்கொள்ளுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளின் சிரமத்தை தவிர்க்கும் விதமாக பயிர் இன்சூரன்ஸ் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் வலியுறுத்தியுள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாசன சங்க தலைவர் வன்மீகநாதன் கூறுகையில், அடங்கல் சான்று வழங்குவதில் தாமதம், சர்வர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் பதிவை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் பதிவுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வலியுறுத்தி கலெக்டரிடம் சங்க பிரதிநிதிகள் நேற்று மனு அளித்துள்ளோம் என்றார்.

