ADDED : ஏப் 23, 2025 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை வடக்கு ரத வீதி ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்.,ல் பணம் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். பஸ் ஸ்டாண்ட் அருகில் இருப்பதால் பயணிகளுக்கு பயனுள்ளதாக உள்ளது.
சில நாட்களாக ஏ.டி.எம்., அறையில் மின் விளக்கும் இல்லாமல் இருட்டாக இருந்தது. இதனால் பணத்தை எண்ணி சரி பார்க்க முடியாமல் வெளியில் வந்து டூவீலர் வெளிச்சத்தில் சரிபார்த்து சென்றனர். எனவே மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மின்விளக்கு வசதி ஏற்படுத்தபட்டது.

