/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவு ஊழியர் மீது தாக்குதல்
/
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவு ஊழியர் மீது தாக்குதல்
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவு ஊழியர் மீது தாக்குதல்
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவு ஊழியர் மீது தாக்குதல்
ADDED : ஜூலை 28, 2025 05:50 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை தொடர்கிறது. எக்ஸ்ரே மையத்தில் பணிபுரியும் தற்காலிக பணியாரை தாக்கியதில் அவர் அவசர வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் போதுமான பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இங்கு புறக்காவல் நிலையம் இருந்தாலும் ஒரே ஒரு போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். ராமநாதபுரம் வண்டிக்காரத்தெருவில் குழாயடிச்சண்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையிலும் தொடர்ந்து அடி, தடியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன் தினம் இரவு ராமநாதபுரத்தில் நடந்த தகராறில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வந்துள்ளனர். அப்போது 24 மணி நேரமும் செயல்படும் எக்ஸ்ரே மையத்தில் திருப்புல்லாணியை சேர்ந்த தற்காலிக பணியாளர் ஜெகதீஸ் பணியில் இருந்துள்ளார். அவரிடம் சிகிச்சைக்காக வந்தவர் தகராறு செய்து முற்றவே ஜெகதீசை தாக்கினர். இதில் காயமடைந்த அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இது போன்ற பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் இங்கு பணிபுரியும் ஊழியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் அச்சத்துடன் பணிபுரியும் நிலை உள்ளது. மாவட்ட போலீஸ் நிர்வாகம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.