/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வடமாநில தொழிலாளர் மீது தாக்குதல்
/
வடமாநில தொழிலாளர் மீது தாக்குதல்
ADDED : பிப் 13, 2026 02:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் வட மாநில தொழிலாளர்களை மர்ம ஆசாமிகள் தாக்கியதில் 3 பேர் காயமடைந்தனர். ஒடிசா, மேற்குவங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் ராமேஸ்வரம் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் கிழக்கு தெருவில் தனியார் விடுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர்கள் மீது நேற்று இரவு போதையில் இருந்த மர்ம ஆசாமிகள் 3 பேர் கம்புகளால் தாக்கினர்.
இதில் தொழிலாளர்கள் சத்ருசிம்கா24, ரத்துால் ஹாவார்27, கிருஷ்ணா சிம்கா40, காயமடைந்தனர். அவர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். ராமேஸ்வரம் டவுன் போலீசார் மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

