ADDED : ஜன 04, 2025 03:40 AM
ராமேஸ்வரம்: தங்கச்சிமடத்தில் சொத்து தகராறில் ஏற்பட்ட அடிதடியில் இளைஞர் ஒருவர் காயமடைந்தார். இருவரை போலீசார் கைது செய்தனர்.
தங்கச்சிமடம் சிங்கம் லியோன், சகாயம், பிலேவியான், பெனிட்டோ இவர்களது சொத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு பிரித்துக் கொண்டனர். இதில் சகாயம் மகன் டோஜோ லியோன் 35, பெரியப்பா, சித்தப்பாவுடன் சொத்து பிரித்தது குறித்து பேசி வந்துள்ளார்.
இதில் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த சிங்கம் லியோன் மகன்கள் ரோஜன் 28, பிளாசன் 30, மற்றும் பிலேவியான்5 5, பெனிட்டோ 58, ஆகியோர் கட்டையால் டோஜோ லியோனை தாக்கியதில் காயமடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தங்கச்சிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சி கொலை முயற்சி வழக்கு பதிந்து ரோஜன், பெனிட்டோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான பிலேவியான், பிளாசனை போலீசார் தேடி வருகின்றனர்.

