கொலை வழக்கில் பழி வாங்கும் நோக்கத்தில் தாக்கியவர் கைது
கொலை வழக்கில் பழி வாங்கும் நோக்கத்தில் தாக்கியவர் கைது
UPDATED : ஆக 17, 2026 05:13 PM
ADDED : ஆக 17, 2026 04:52 PM
தொண்டி:கொலை வழக்கில் பழி வாங்கும் நோக்கில் தாக்கி விட்டு தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.தொண்டி அருகே நம்புதாளை படையாச்சிதெருவை சேர்ந்தவர்கள் நாகூர்செல்வம் 33. அடையாளவேல் 23. மீனவர்களான இருவருக்கும் கடற்கரையில் படகை நிறுத்துவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. 2026 பிப். 5ல் அவர்களிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அடையாளவேல் அவரது சகோதரர் ராக்கப்பன் 25, இருவரும் கையில் வைத்திருந்த வலை அறுக்கும் கத்தியை எடுத்து நாகூர்செல்வதை குத்தி கொலை செய்தனர். தொண்டி போலீசார் அடையாளவேலு, ராக்கப்பனை கைது செய்தனர்.
இதில் ராக்கப்பன் சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்து பாசிபட்டினத்தில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கொலையான நாகூர்செல்வம் சகோதரர் அஜித் 32, மற்றும் இருவர் சேர்ந்து பழிவாங்கும் நோக்கில் ராக்கப்பனை கம்பியால் தாக்கிவிட்டு தலைமறைவாயினர். எஸ்.பி.பட்டினம் எஸ்.ஐ. ரமேஷ் தலைமறைவாக இருந்த அஜித்தை கைது செய்தார்.
