/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மணல் கடத்தலை தடுத்ததால் வி.ஏ.ஓ.,வை கொல்ல முயற்சி
/
மணல் கடத்தலை தடுத்ததால் வி.ஏ.ஓ.,வை கொல்ல முயற்சி
ADDED : ஜூலை 28, 2025 03:10 AM
திருவாடானை: தொண்டி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற வி.ஏ.ஓ., மற்றும் போலீசார் மீது லாரி ஏற்ற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கிடங்கூர் பாம்பாற்றில் மணல் திருடப்படுவதாக தகவல் கிடைத்தது. பாகனுார் வி.ஏ.ஓ., கிராணவள்ளி, எஸ்.பி.பட்டினம் சிறப்பு எஸ்.ஐ., பாலு, போலீஸ்காரர் முகமது அஸ்லாம், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, மணல் கடத்தலை தடுக்க சென்றனர்.
அங்கு, லாரியில் மணல் அள்ளி கொண்டிருந்தவர்களை பிடிக்க முயன்ற போது, ஒரு லாரி அவர்களை நோக்கி மோதுவது போல் வேகமாக வந்தது. வி.ஏ.ஓ., மற்றும் போலீசார் சுதாரித்து விலகி தப்பினர். பின், லாரி அங்கிருந்து சென்றது.
வி.ஏ.ஓ., கிராணவள்ளி புகாரில், பெருவண்டலை சேர்ந்த ஜெயக்குமார், 34, சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே பிராந்தனியை சேர்ந்த செல்வகுமார், 41, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், நத்தக்கோட்டையை சேர்ந்த மாலா, 35, ராஜேஷ், 40, சரவணன், 21, ஹரிகரன், 24, ஆகியோரை தேடி வருகின்றனர்.