/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாலிபரை கொலை செய்ய முயற்சி: மேலும் 2 பேர் கைது
/
வாலிபரை கொலை செய்ய முயற்சி: மேலும் 2 பேர் கைது
ADDED : நவ 13, 2024 05:54 AM
திருவாடானை : திருவாடானை அருகே குருந்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் சேதுராமன் 32. சூர்யா 30. இருவரும் வெவ்வேறு தரப்பை சேர்ந்தவர்கள். இருவருக்கும் எட்டு ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு குருந்தங்குடி டாஸ்மாக் கடை முன்பு சேதுராமன் நின்றிருந்தார்.
அப்போது ஆறு பேர் கும்பல் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த சேதுராமன் தேவகோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சேதுராமன் புகாரில் குருந்தங்குடி சூர்யா 30, ஊரணிக்கோட்டை அண்ணாத்துரை 23, இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். நேற்று சிவகங்கை மாவட்டம் வேம்பத்துார் அருள்மாரி 22, சிவகங்கை பள்ளித்தெரு அஜய்பாண்டி 20, ஆகியோரை திருவாடானை இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி கைது செய்தார்.

