/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடப்பாரையால் உடைத்து ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி
/
கடப்பாரையால் உடைத்து ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி
கடப்பாரையால் உடைத்து ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி
கடப்பாரையால் உடைத்து ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி
ADDED : டிச 04, 2024 11:55 PM

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் கனரா வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் தேடுகின்றனர்.
ராமநாதபுரம் லாந்தை அருகே செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி அருகில் மதுரை ரோட்டோரத்தில் கனராவங்கி ஏ.டி.எம்., இயந்திரம் உள்ளது. இந்த இயந்திரத்தை நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மர்ம நபர் கடப்பாரையால் உடைத்துள்ளார்.
சேப்டி லாக்கரை உடைக்க முடியாமல் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திவிட்டு தப்பினார்.
கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் பைரவி சம்பவ இடத்திலிருந்து சந்தை வழியான் கோயில் செல்லும் விலக்கு வரை வந்து நின்றது. அங்கு பஸ் ஸ்டாப் இருப்பதால் கொள்ளையடிக்க வந்தவர் பஸ்சில் ஏறி தப்பியிருக்கலாம் என போலீசார்தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விசாரிக்கிறார்.
போலீசார் கூறுகையில், 'சேதப்படுத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்த நபர் முகத்தில் போர்வையை சுற்றிக்கொண்டு வந்திருந்ததால் அடையாளம் காண முடியவில்லை. அவரை தேடுகிறோம். ஏ.டி.எம்., இயந்திரத்தில் கடைசியாக நவ.,30 ல் பணம் நிரப்பியுள்ளனர். பணமும் பெரிய அளவில் இல்லை' என்றனர்.