தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்

 கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்

 கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்


ADDED : ஆக 18, 2026 02:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 02:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள 480 கிலோ கடல் அட்டைகளை மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மண்டபம் வேதாளை கடலோரத்தில் மரைன் போலீஸ் எஸ்.ஐ., காளிதாஸ், போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மறைவான இடத்தில் இரு அண்டாக்களில் 13 மூடையில் 480 கிலோ அவித்த கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருந்தனர். போலீசார் சென்றதும் அங்கிருந்த கடத்தல்காரர்கள் தப்பி ஓடினர். கடல் அட்டையை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்ததில், கள்ளத்தனமாக படகில் இலங்கைக்கு கடத்திச் செல்ல கடத்தல்காரர்கள் திட்டமிட்டிருந்தது தெரிந்தது.

பறிமுதல் செய்த கடல் அட்டை மதிப்பு ரூ. 50 லட்சம். அதனை மண்டபம் வனத்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us