/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பகுதிநேர ஆசிரியர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
பகுதிநேர ஆசிரியர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 03, 2024 05:30 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர்அலுவலகம் அருகே தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் 2012 முதல் பகுதி நேரமாக பணிபுரியும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநிலச் செயலாளர் டி. மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வடிவேல் முருகன், தலைவர் த.மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., அரசு 2021 சட்டசபை தேர்தலின் போது பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக பணிநிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளித்தனர்.
அதை முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோஷமிட்டனர். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர். பொருளாளர் பிரேம்குமார் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டம் முடிந்த பின் ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.