ADDED : ஆக 26, 2025 03:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே கோகுல மக்கள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.கட்சியின் நிறுவனத் தலைவர் சேகர் கூறியதாவது:
தமிழகத்தில் அருந்ததியர், முஸ்லிம்களுக்கு தனி உள் இட ஒதுக்கீடு வழங்கியது போல், யாதவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் தனி உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக யாதவ மகாசபை மூலம் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போதுதமிழகம் முழுவதும் முதற்கட்டமாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
அடுத்தக்கட்டமாக போராட்டம், சாலை மறியல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். யாதவ சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு தி.மு.க., எவ்வித அதிகாரமும் வழங்கவில்லை என்றார்.மாநில அமைப்புச் செயலாளர் தங்கவேலு, மாவட்ட தலைவர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.