/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பேரூராட்சி கடைகளின் ஏல தேதி ஒத்திவைப்பு
/
பேரூராட்சி கடைகளின் ஏல தேதி ஒத்திவைப்பு
ADDED : மே 28, 2025 11:15 PM
முதுகுளத்துார்:முதுகுளத்துார் பேரூராட்சி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள பேரூராட்சி கடைகளுக்கான ஏல தேதி ஒத்தி வைக்கப்பட்டது.
முதுகுளத்துார் பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில் உள்ள 11 கடைகள் மற்றும் கீழ் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு நேற்று முன்தினம் ஏலம் நடைபெற இருந்தது.
முன்பணம் செலுத்திருந்தவர்கள் ஏலம் எடுப்பதற்காக பேரூராட்சி அலுவலகம் வந்தனர். அப்போது பேரூராட்சி கடை ஏலம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு மறுதேதி குறிப்பிடும் வரை ஒத்திவைக்கப்படுகிறது என்று பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் கூறினார்.இதுகுறித்து அறிவிப்பு பலகையிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
ஏலதாரர் இளமாறன் கூறியதாவது: பேரூராட்சிக்கு உட்பட்ட கடைகள் ஏலம் நடைபெற இருந்த நிலையில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் நிர்வாக காரணம் என்று கூறிவிட்டு ஏலம் ஒத்தி வைக்கப்படுகிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் ஏலம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதேபோல் முதுகுளத்துாரில் கடைகள் ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சில கடைகள் மட்டும் அடைத்திருந்தனர்.