நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலின் 30 அடி உயரம் கொண்ட வடகிழக்கு மதில் சுவரில் கருடாழ்வார் சிலை உள்ளது.
இங்கு ஆடி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு மாலையில் மூலவர் கருடாழ்வார் சிலைக்கு 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
மலர் மாலை மற்றும் துளசி மாலை சாற்றப்பட்டது.
அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.