/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊருணியில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி
/
ஊருணியில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி
ADDED : ஜன 08, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம், ராமநாதபுரம் மூலக்கொத்தளத்தை சேர்ந்த துரைப்பாண்டியன் மகன் ராஜபாண்டி 33. இவர்ராமேஸ்வரத்தில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
இவர் தனது மனைவி லாவண்யா 31, மகன் நிரேஷ்பாண்டியன் 3, மாமியார் சித்ரா 52, ஆகியோருடன் ராமநாதபுரம் வடக்குத்தெருவில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
குடும்பத்துடன் குளிப்பதற்காகநொச்சிவயல் ஊருணிக்கு சென்றனர். அனைவரும்படித்துரையில் குளித்து கொண்டிருந்தனர்.
ராஜபாண்டி ஊருணியில் நீச்சல் அடித்து குளித்து கொண்டிருந்தவரை காணவில்லை.
தீயணைப்புத்துறையினர் ராஜபாண்டி உடலை மீட்டனர். ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.